தற்போதைய செய்திகள்

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்?

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கி அலுவலகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அபாய மணி ஒலித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை கரும்புகை வெளியேறி அபாய மணி ஒலித்த‌து.

அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்த‌து தெரிய வந்த‌தால், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

3 வண்டிகளில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில், கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்