தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - புதிய தகவல் | sathankulam

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் , கடந்த ஆண்டு, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் .

அதில் , வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதற்கிடையே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 4 மாத கால , கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு உயர்நீதின்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்