தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் அருகே, தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை, வைரம் திருடியது தொடர்பாக பணிப்பெண், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
• திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற தொழிலதிபர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பினார். • குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, அவற்றை சரிபார்த்த போது, ஒரு வைர கம்மல், 53 சவரன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். • இது குறித்த புகாரின் பேரில், ரகுபதி வீட்டில் பணியாற்றிய மகேஸ்வரி என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். • முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். • பின்னர், 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மகேஸ்வரி, அவரது கணவர் துளசி ஆகியோரை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்