தற்போதைய செய்திகள்

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி கைது

தந்தி டிவி

பிரபல கடத்தல் மன்னனான சந்தன கடத்தல் வீரப்பனின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவர் பிரகாஷ் ஜெயின். வீரப்பனின் மறைவுக்கு பிறகு யானை தந்தங்களை கடத்தி வந்த பிரகாஷ் ஜெயினை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் 13 கிலோ யானை தந்தத்தை கடத்திய போது அஹமதாபாத் போலீசாரால் பிரகாஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தமிழகத்தில் தேடப்பட்டு வரும் நபராக பிரகாஷ் ஜெயின் இருப்பதால், அவரை குஜராத்தில் இருந்து தமிழகம் கொண்டு வரதற்கான நடவடிக்கைகளில் தமிழக காவல்துறையினர் இறங்கினர். இந்நிலையில், புலித்தோல் கடத்தியது என மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரகாஷ் ஜெயினை, தமிழக வனத்துறை குற்றப்பிரிவு காவலர்களிடம் அஹமதாபாத் போலீசார் ஒப்படைத்தனர். இவர் வீரப்பனின் மறைவுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு வரை வீரப்பனின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"