தற்போதைய செய்திகள்

மீண்டும் கேரளாவை மிரட்டும் அதே விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பலி

தந்தி டிவி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, படகு கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர், உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை அழைத்துக் கொண்டு வைக்கம் நோக்கி படகில் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத், அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு பேரை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கேரளாவில், ஏற்கனவே சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் படகு கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்