தற்போதைய செய்திகள்

"சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்ககாசு திருடிய அறநிலையத்துறை செயல் அலுவலர்" -அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

தந்தி டிவி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணியின்போது, தங்க காசுகளை திருடிய அறநிலையத்துறை செயல் அலுவலரை, போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று கோயில் அன்னதானம் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் செலுத்திய தங்க காணிக்கை எண்ணும் பிரிவில் பணியில் இருந்த திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல், 30 கிராம் கொண்ட 5 தங்க காசுகளை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் விரக்தியடைந்த வெற்றிவேல், தன்னை காட்டிக் கொடுத்தால் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொள்வேன் என கூறியதால் கோயில் ஊழியர்கள் அவரிடம் இருந்த தங்க காசுகளை வாங்கிக்கொண்டு, அவரை அனுப்பிவிட்டனர்.

இதுகுறித்த புகாரைத்தொடர்ந்து தலைமறைவான வெற்றிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் செயல் அலுவலர் வெற்றிவேலை, பணிடை நீக்கம் செய்து, அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்