தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமிக்கு காதல் வலை... கர்ப்பமாக்கிவிட்டு தலை தெறிக்க தப்பியோடிய காவலர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி
• தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில், பிரபாகரன் 2 ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். • கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு பிரபாகரன் சென்றபோது, அங்கு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. • சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். • பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். • இதுதொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன், இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபரின் உதவியுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. • தப்பியோடிய பிரபாகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்