தற்போதைய செய்திகள்

குளிர்பானம் என நினைத்து... ரசாயனத்தை குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக பலி.. சேலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். • இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் உள்ள கரைகளை துடைப்பதற்காக, ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம். • இந்த நிலையில், வீட்டில், பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்தை, தங்கராஜின் 2 வயது குழந்தை, குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளது. • அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். • அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • குழந்தை உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்