தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை - 6 பெண்கள் அதிரடி கைது

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வசந்த கிருஷ்ணாபுரம், காடகனூர், வீரபாண்டி, ஒட்டம்பட்டு ஆகிய பகுதிகளில் சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு சென்ற போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த வள்ளி, தனபாக்கியம், நிர்மலா, வசந்த கிருஷ்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு, காடகனூர் பகுதியை சேர்ந்த மல்லிகா மற்றும் ஒட்டம்பட்டு பகுதியை சேர்ந்த பவுனு என 6 பெண்களை கைது செய்தனர். இந்த 6 பேரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்