தற்போதைய செய்திகள்

ரொனால்டோ எடுத்த திடீர் முடிவு..பேரதிர்ச்சியில் கால்பந்து உலகம் - அணியில் குழப்பம் ஏற்படுமா?

தந்தி டிவி

முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்னதாக ரொனால்டோ ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில், அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர்கள் குறித்தும், மேலாண்மை குறித்தும் விமர்சித்து இருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்த அணி, அவரின் ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ரொனால்டோ இதுவரை 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி