தற்போதைய செய்திகள்

"தனது பிறந்தநாளில் மகன், மகள் குறித்து மனம் திறந்து பேசிய ரோஜா"

தந்தி டிவி

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழுமலையான எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது என்றும், மீண்டும், மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய மகன், மகள் ஆகியோர் விருப்பப்பட்டு நடிப்புத் தொழிலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நடிகை ரோஜா தெரிவித்தார்.

சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்