தற்போதைய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் - இயந்திர சோதனை வெற்றி..!

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாக மையம் அமைந்துள்ளது.

இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரங்களின் சோதனை நடைபெறும். .

இந்நிலையில், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது.

கிரையோஜெனிக் எந்திரத்தின் சி.20 இ11 எம்.கே.111 பரிசோதனை 28 விநாடிகள் நீடித்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வாளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்