தற்போதைய செய்திகள்

ஹோம் டூர் வெளியிட்ட கோவை யூடியூபர்... வீடியோவை பார்த்து வீட்டுக்குள் புகுந்த திருடன்... அடுத்து நடந்த பயங்கரம்

தந்தி டிவி

கோவையில் யூடியூபர் வெளியிட்ட ஹோம் டூர் வீடியோவை பார்த்து கொள்ளையடிக்க வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியில் வசித்து வருபவர் யூடியூபர் சுஹைல். இவர் யூடியூபில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள நிலையில், 2 மாதங்களுக்கு முன்பாக புதியதாக கட்டியுள்ள வீட்டினை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட புதுச்சேரியை சேர்ந்த அனுராமன் என்பவர் கடந்த சனிக்கிழமை சுஹைலின் வீட்டினுள் புகுந்துள்ளார். பின்னர், சுஹைலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், அனுராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் வீட்டுக்கு திருடன் வந்ததை மீண்டும் சிசிடிவி ஆதாரங்களுடன் வீடியோவாக பதிவிட்டுள்ளார் சுஹைல்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்