தற்போதைய செய்திகள்

துப்பாக்கி காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்.. சுழட்டி சுழட்டி அடித்த கடை ஓனர்

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில், நகைக்கடைக்குள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையை ஒட்டி உள்ள மீரா சாலை பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை மாலையில் இருவர் நுழைந்தனர். நகை வாங்குவதுபோல் நடித்து, கடை உரிமையாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். எனினும் சுதாரித்துக்கொண்ட கடை உரிமையாளர், அங்கிருந்த ராடு ஒன்றை எடுத்து கொள்ளையர்களை தாக்கத் தொடங்கினார். பின்னர் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’