தற்போதைய செய்திகள்

"ஆளுநர் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவில்லை" - ப்ரியன், மூத்த பத்திரிகையாளர்

தந்தி டிவி

"தமிழ்நாடு என்பது பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த பெயர்"... 

தமிழ்நாடு பெயர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.

காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார்.

அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்கவில்லை என்றும்,

வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் "தமிழகம்" என்பதை "மிகவும் பொருத்தமான வெளிப்பாடு" என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் எதார்த்தத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி,

தனது பேச்சின் அடிப்படை புரியாமல், தான் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்காக பரிந்துரை செய்வதாக வாதங்கள் விவாதப் பொருளாகி இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே