தற்போதைய செய்திகள்

"தமிழகத்தில் இருந்து பரவிய சனாதன கலாசாரம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

பயங்கரவாதம், போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து உலக மக்களை காக்க இந்தியா ஒளியாக இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவையாறு காவிரி ஆற்றங்கரையோரம், தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய அவர், பொருளாதாரம், ராணுவம், ஆன்மிகத்தில் வலிமையாக உள்ள இந்தியா, இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் முதல் நாடாகவும், தலைமையாகவும் விளங்கும் என்றார்.

இந்தியா ஆட்சியாளர்கள், பலமிக்கவர்களால் உருவாக்கப்படவில்லை என்றும் ரிஷிக்கள், புனிதர்கள், கவிஞர்கள் உள்ளிட்டவர்களால் கட்டமைக்கப்பட்டது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சனாதன கலாசார அலை தெற்கில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தான் நாடு முழுவதும் பரவியதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்