தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய் - விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முதல்வர்

தந்தி டிவி

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு (World Gastrology Organisation), தமிழ்நாடு காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட் டிரஸ்ட் (Tamil Nadu Gastroentrologist Trust) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணிகள் இயக்குநர் வெங்கடாசலம், இரைப்பை குடலியல் துறை தலைவர் கே.ஆர். பழனிசாமி, மருத்துவ ஆலோசகர்கள் பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆரோக்கிய பழக்கங்களை கடைப்பிடிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு