தற்போதைய செய்திகள்

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிப்பு..!

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, 7 இடங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே மூத்த அதிகாரிகள் 24 மணி நேரமும் 139 என்ற உதவி எண்ணில் பதிலளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சரியான தகவல்களை வழங்க உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவை தடையின்றி தொடரும் என்றும், ரயில்வே நிர்வாகம் அறிவித்த உதவித் தொகையை உடனடியாக வழங்குவதையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தாருக்கும், பலத்த காயமடைந்த 50 பேருக்கும், லேசான காயமடைந்த 224 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 285 பேருக்கும் சேர்ந்து 3 கோடியே 22 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோரோ, காரக்பூர், பாலசோர், காந்தபாரா, பத்ரக், கட்டாக், புவனேஸ்வர் ஆகிய 7 இடங்களில் உதவித் தொகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?