தற்போதைய செய்திகள்

"இனி ஹோட்டலில் என்ன கறி-ன்னு பார்த்துட்டு தான் சாப்பிடணும் போல..." மல்லி மட்டனில் எலி கிரேவி...! கத்தி கலங்க விட்ட பிரபல உணவகம்

தந்தி டிவி

பஞ்சாப்பில் பிரபல ஓட்டலில் பரிமாறப்பட்ட மல்லி மட்டனில் செத்த எலி கிடந்த விஷயம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஒருநாள் ஓட்டல் சென்று பிடித்ததை ஒரு புடி பிடித்துவிட வேண்டும் என்பது எலோருக்கும் எழும் ஒரு வழக்கமான ஆசை... இப்படி செல்லும் போது ஓட்டலில் வழங்கும் உணவில் கரப்பான் பூச்சிகள், புழு கிடக்கும் காட்சிகள் அறுவறுக்கச்செய்யும்... இப்போது இதெல்லாம் என்ன...

இதோட ஸ்பெஷல் ஐட்டம் உள்ளது என்பது போல வடிவேலு பட காட்சியை நினைவு படுத்தியிருக்கிறது பஞ்சாப்பில் நடந்த சம்பவம்...

படத்தில் முறைப்பொண்ணு கல்யாணத்தை நிறுத்த வடிவேலு போட்ட பிளான் சொதப்பியிருக்கும். ஆனால் லூதியானா பிரகாஷ் தாபா ஓட்டலில் என்ன பிளான் போட்டார்கள் என்றுதான் தெரியவில்லை.

வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட மல்லி மட்டனில் செத்த எலி கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. குடும்பத்தோடு சாப்பிட சென்ற வாடிக்கையார் எலியை கண்டு அதிர்ந்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்கும் பலரும் மல்லி மட்டனில் இணைப்பு டிஸ் ஆக எலி கிரேவி வழங்கியிருப்பார்களோ என சந்தேகம் தெரிவிக்கிறார்கள்...

வீடியோவை பார்க்கும் பலரும் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓட்டலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், ஓட்டல் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆனால் இணையத்தில் வேகமாக பரவும் வீடியோவை பார்க்கும் பலரும்... இனி ஓட்டலுக்கு சென்றால் என்ன கறி என்று ஆராய்ச்சி செய்துதான் சாப்பிட வேண்டும் போல என கமாண்ட்களை தட்டி வருகிறார்கள்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி