தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்.. சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கீழ்புத்துப்பட்டு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்... அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கடலூரைச் சேர்ந்த கார்த்திக், நாகையன் ஆகிய 2 இளைஞர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் சாக்குப்பையில் 46 அரிய வகை ஆமைகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது... இவ்விருவரும் கழிவுநீர் ஊர்தியில் வேலை பார்க்கும் நிலையில், கழிவு நீர் ஓடைகளில் செல்லும் ஆமைகளை பிடித்துச் செல்லத் திட்டமிட்டு 46 அரிய வகை ஆமைகளை சாக்குப்பையில் போட்டு பைக்கில் கடத்தி வந்த போது பிடிபட்டனர்... ஆமைகள், பைக், மற்றும் இளைஞர்கள் இருவரையும் திண்டிவனம் வனசர அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அவ்விருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்