தற்போதைய செய்திகள்

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது- திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

முசிறி அருகே, பிளஸ்-1 மாணவியை, சிறுமியின் உறவினரான ரெங்கநாதன் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையறிந்த பெற்றோர் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதையறிந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, பாலியல் பலாத்காரத்தை படம் எடுத்தவர்களின் ஒருவன், படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரெங்கநாதன், மணிகண்டன், கணேஷ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்