• ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷூக்கும், பிரியங்கா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன.
• கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில், நன்னடத்தை இல்லாத காரணத்தால், காவல்துறையில் இருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
• மதுபோதையில் இருந்த தினேஷ், தனது தாய் வாணிஸ்ரீயிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
• தாயின் வீட்டிற்கு வந்த மகள் பிரியா, வாணிஸ்ரீ கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
• தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
• சந்தேகத்தின் பேரில் தினேஷை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
• அதில், மதுபோதையில் தனது தாயை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
• பின்னர் போலீசார், தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.