தற்போதைய செய்திகள்

"அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள்" - ராமதாஸ் எச்சரிக்கை

தந்தி டிவி
• வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் உள்ள இட ஒதுக்கீட்டுக்கான, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாத‌ங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். • சமூக நீதி வழங்குவதில், தமிழக அரசால் ஏற்படுத்தப்படும் காலதாமத‌த்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். • இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு தொடக்கத்தில் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரு மடங்கு காலக்கெடு வழங்குவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். • தமிழகத்தில் வன்னியர்களுக்குத் தான் மிக நீண்ட, மிக அதிக போராட்ட வரலாறு உண்டு என அவர் கூறியுள்ளார். • அத்தகைய சூழலை ஏற்படுத்தி விடாமல், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாக மே 31-ஆம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி சமூக நீதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்