விஜயவாடாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தோடு செல்பி எடுக்க, ரசிகர்கள் முட்டி மோதினர். விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள், ரஜினிகாந்த்தோடு கைகுலுக்கி மகிழ்ந்தனர். மேலும் அவரோடு செல்பி எடுக்க முட்டி மோதினர்.