தற்போதைய செய்திகள்

ராஜீவ் வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் மூத்த பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்திருப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு தான் அதிக அதிகாரம் இருப்பதாகவும், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சிபிஐ விசாரணை நடத்திய இது போன்ற முக்கிய வழக்குகளில், தலையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்