தற்போதைய செய்திகள்

கூடையில் ரூ.2 கோடி பணம்.. ரூ.71 லட்சம் தங்கம்.. தங்கை திருமணத்துக்கு ரூ.8 கோடிக்கு சீர்.. ஜாம் ஜாமென நடத்திய அண்ணன்கள்

தந்தி டிவி
• இந்தியாவில் வரதட்சணை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. • அங்குள்ள நாகௌர் மாவட்டத்தில் உள்ள திங்காசாகர் கிராமத்தை சேர்ந்த பன்வாரி தேவிக்கு மார்ச் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. • இந்த திருமணத்துக்கு தேவியின் 4 சகோதரர்கள் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்துள்ளனர். • அந்த தொகையில், 2 கோடியே 21 லட்ச ரூபாய், கூடையில் வைத்து கொண்டு வரப்பட்டு, மேடையிலேயே ரொக்கப் பணமாக கொடுக்கப்பட்டது. • இதவிர, நான்கரை கோடி மதிப்புள்ள நிலம், 71 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ வெள்ளி என மொத்தம் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்டது. • மேலும், 7 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டர் ஒன்றும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்