தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து 12 பேரை கடித்து குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே சிறுவன் உட்பட 12 பேரை வெறிநாய் கடித்து குதறியதால், கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் பகுதியில், வெறிநாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, சிறுவன் உட்பட 12 பேரை கடித்து குதறி தப்பிச் சென்றது.

காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கிராம மக்களை கடித்து குதறிய வெறிநாயை தேடி பிடித்து, அடித்து கொன்று புதைத்து விட்டனர்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து வெறிநாய் கடித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்