தற்போதைய செய்திகள்

மீனவர்களுக்காக டெல்லியில் கனிமொழி கேட்ட கேள்வி

தந்தி டிவி

இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து, மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், ஈரானில் இதுவரை 15 இந்திய மீனவர்களும், இலங்கையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீனவர்கள் கைது குறித்த தகவல் கிடைத்தவுடன், இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளின் தூதரங்களை அணுகி, மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். சில வழக்குகளில் சட்ட உதவி அளிக்கப்படுவதாகவும், விசாரணையை விரைவில் முடித்து, முன்கூட்டியே விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் அதிகாரிகள் உதவுவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் முயற்சியால், இந்த ஆண்டில் இதுவரை 588 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு