தற்போதைய செய்திகள்

"2024-ல் இந்தியாவில் குவாட் மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி

தந்தி டிவி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த குவாட் மாநாடு முதலில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹிரோஷிமாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2024-ம் ஆண்டு குவாட் நாடுகளின் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.உலகளாவிய வர்த்தகம் புதுமை வளர்ச்சி போன்றவற்றின் என்ஜினாக குவாட் நாடுகள் உள்ளது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் அந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் வார்டு நாடுகள் அளப்பரிய வளர்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்