தற்போதைய செய்திகள்

"ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் சூழல் கடினம்"..."தொடர் சண்டை மக்களுக்கு பாதுகாப்பில்லை" - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

தந்தி டிவி

உக்ரைனில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்...

காணொலி வாயிலாக அரசு அதிகாரிகளுடன் உரையாற்றிய புதின் இவ்வாறு தெரிவித்தார்... மிக முக்கிய பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என வலியுறுத்திய புதின், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட புதிய பிராந்தியங்களில் சூழல் கடினமாக இருப்பதாகவும், சில இடங்களில் சண்டை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எல்லா இடங்களிலும் அமைதியான வாழ்க்கை மீட்டெடுக்கப்படவில்லை என்றும், மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த புதின், நிச்சயமாக இந்த காரணிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்