தற்போதைய செய்திகள்

நல்லது நினைத்த சமூக ஆர்வலரின் வீட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்...சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

அம்பத்தூர் அடுத்த கல்விகுப்பம் சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ராமசாமி, அப்பகுதியில் உள்ள ஏரி நிலங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இவரது மனுக்களை ஏற்று, ஆட்சியர் மற்றும் கோட்டாசியர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சீனிவாசபுரம், சக்திநகர் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 600 சதுர அடிக்குமேல், பயன்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இடம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர், சமூக ஆர்வலர் ராமசாமி வீட்டை முற்றுகையிட்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி, அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை அடித்து உடைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்