தற்போதைய செய்திகள்

PT டீச்சர்ஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த Head Masters

தந்தி டிவி

பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு, உடற்கல்வி ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறி இருப்பது, உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் சுற்றறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள் நடைபெறுவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு என்றும், மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு உடற்கல்வி ஆசிரியர்களே முழு பொறுப்பை ஏற்க நேரிடும் என்றும் கூறி உள்ளார். பல்வேறு தலைமை ஆசிரியர்கள் இதேபோல் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எந்த பிரச்சனை என்றாலும் தங்களை பலிகடா ஆக்குவது நியாயம் இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்