தற்போதைய செய்திகள்

விவசாய கடன் தராததால் டவரில் ஏறி போராட்டம்.. விவசாயி செயலால் பரபரப்பு

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே விவசாய கடன் தர மறுத்ததை கண்டித்து விவசாயி ஒருவர், திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர், விவசாய கடன் கேட்டு, கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகியுள்ளார்.

விவசாயக் கடன் தர மறுத்ததை அடுத்து கச்சனம் கடைவீதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

திமுக கொடியுடன் விவசாயக் கடன் வழங்ககோரி கோஷம் எழுப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறங்கி வரும்படி சுப்பிரமணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடன் வாங்கி தருவதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சுப்பிரமணியன் செல்போன் டவரில் இருந்து இறங்கி வந்தார்.

அவரை போலீசார் பத்திரமாக காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்