தற்போதைய செய்திகள்

மோசமான சாலைகளுக்கு எதிரான நூதன பிரச்சாரம் - பள்ளங்களில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

தந்தி டிவி

மோசமான சாலைகளுக்கு எதிரான நூதன பிரச்சாரம் - பள்ளங்களில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

கர்நாடகாவில் சாலைகள் மிக மோசமாக இருப்பதை கண்டிக்கும் விதமாக நூதன பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் செல்பி வித் பாத்ஹோல் என்ற தலைப்பில் இளைஞர்கள் சாலை பள்ளங்களுடன் செல்ஃபிக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் தீபாவளிக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நபர் மோசமான சாலையால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மோசமான சாலைகளை சரி செய்யாமல் மெத்தனமாக இருக்கும் அரசை கண்டிக்கும் விதமாக பள்ளங்களில், தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். இதேபோல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலைப் பள்ளங்களில் பட்டாசுகளை வெடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்