தற்போதைய செய்திகள்

சொத்து வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா நேரில் ஆஜர்...

தந்தி டிவி

சொத்து வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிகை நகல் ஒப்படைக்கப்பட்டது.

வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் சொத்து சேர்த்ததாக 2015ல் திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்