தற்போதைய செய்திகள்

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வை தலைமைச் செயலர் இறையன்பு அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக அரசில் 1992 -ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்புக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே.கோபால், Tangedco தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானி, தகவல் தொழில் நுட்பம் - டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக உள்ள மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை