மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, 160 கிளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரியும், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.