தற்போதைய செய்திகள்

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு அடையாளச் சான்று தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்களை வங்கி ஊழியர்கள் அலைக்கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, அவற்றை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கி கிளைகளில் எந்த வித அடையாளச் சான்றும் காண்பிக்காமல் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி பூராணாங்குப்பத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்த வாடிக்கையாளரிடம், வங்கி ஊழியர்களும், வங்கி மேலாளரும் அடையாளச் சான்று அளித்தால் மட்டுமே 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றித்தர முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதுதொடர்பாக, வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்