தற்போதைய செய்திகள்

மாணவியை பல முறை பலாத்காரம் செய்து கருவை கலைத்த தனியார் டாக்டர் - சேலத்தில் பகீர் சம்பவம்

தந்தி டிவி

சமூகவலைதளம் மூலம் பழகி, மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண், சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவருடன், சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாகக் கூறி தமிழ்ச்செல்வன் பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கர்ப்பமானதை கட்டாயப்படுத்தி கலைத்துவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதகாவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் கோரியிருந்தார். புகாரின் அடிப்படையில், மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்