தற்போதைய செய்திகள்

மஞ்சள் காமாலை இருந்ததால் மன உளைச்சல்...தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு

தந்தி டிவி

சென்னையில் வட மாநில இளைஞர் ஒருவர் மருத்துவமனையின் 9-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் நீலேஷ் குமார் ஷர்மா. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, இவரை பரிசோதித்த மருத்துவர்கள் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமலை இருப்பதாக கூறியதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென மருத்துவமனையின் 9-ஆவது மாடியில் இருந்து நீலேஷ் குமார் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்