தற்போதைய செய்திகள்

திகார் சிறையில் கைதி கொலை.. 6 தமிழக காவலர்கள் சஸ்பெண்ட்டான விவகாரம் - விசாரிக்க DGP உத்தரவு

தந்தி டிவி

டெல்லி, திகார் சிறையில் திடீரென இரு தரப்பு கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், யோகேஷ் மற்றும் தீபக் ஆகிய இருவர், தில்லு தாஜ்பூரியா என்ற கைதியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை சிறைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த தமிழக சிறப்பு காவல் படையினர் தடுக்கவில்லை என கூறி 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு கமாண்டோ படையின் ஏடிஜிபி ஜெயராமனை டெல்லி திகார் சிறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்தார். இதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 தமிழக காவலர்களிடமும், சிறை காவலர்களிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்