தற்போதைய செய்திகள்

அஜித் பவாருடன் பிரதமர் மோடி... மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பரபரப்பு

தந்தி டிவி

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 39 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் அஜித் பவர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தின் இடையே அஜித் பவார் மற்றும் பிரஃபுல் பட்டேல் இருவரையும் பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இருவரும் சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இருவரிடமும் பிரதமர் மற்றம் அமித் ஷா ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் அஜித் பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசி இருப்பது உற்று நோக்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்