தற்போதைய செய்திகள்

"வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம்" - கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு

தந்தி டிவி

பெங்களூரு வெள்ள பாதிப்புக்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும், வரலாறு காணாத மழையும்தான் காரணம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது என்றார்.

முழு நகரமும் சிரமங்களை எதிர்கொள்வதாக சித்தரிக்கப்படுவதாக கூறிய அவர், உண்மை அவ்வாறு இல்லை என்றார்.

அழகான பெங்களூரின் தற்போதைய அவலத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களின் தவறான நிர்வாகம்தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?