பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரகணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அடிக்கடி ஏற்படும் மின் தடை ஏற்படுவதாகவும், ஜெனரேட்டரும் முறையாக செயல்படாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் டார்ச்லைட் உதவியுடன், சீட்டு வழங்கி வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.