தற்போதைய செய்திகள்

கோழி கடைக்காரர் கொலை வழக்கு - வெவ்வேறு சமுதாயம் என்பதால்... நெல்லை அருகே நிலவும் பதற்றம்

தந்தி டிவி

ஆறுமுகம் என்பவரை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. தொடர்ந்து, முக்கூடல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், ஆறுமுகம் உயிரிழந்தார். பின்னர், பிரேத ப‌ரிசோதனை‌க்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவருடைய உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அரியநாயகிபுரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி, மணிகண்ட செல்வம், தருவையைச் சேர்ந்த ராம், தென்திருப்புவனத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, மது போதையில் ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முக்கூடல் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்