தற்போதைய செய்திகள்

வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் போஸ்ட்மேன் - தக் சேவா விருது கொடுத்து கவுரவம்

தந்தி டிவி

தபால் அலுவலருக்கு தக் சேவா விருது

அம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் தபால் சேவை செய்து வரும் தபால் அலுவலருக்கு தக் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 110 வயதுடைய குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த 1 ஆண்டாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வழங்குவதற்காக, கிறிஸ்து ராஜ என்ற தபால் அலுவலர், அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார். இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த 10-ஆம் தேதி, தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு உயரிய விருதான தக் சேவா விருது வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்