தற்போதைய செய்திகள்

"அண்ணா சத்தியமா நான் திருடல-னா" திருட்டு வண்டிக்கு சொந்த வண்டி போல் பூஜை..மாட்டிக்கொண்ட பின் மழுப்பல்

தந்தி டிவி

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், நண்பரை பார்ப்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அருகில் இருந்த தேநீர் கடையில் நண்பருடன் தேநீர் அருந்தி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது நண்பருடன் இணைந்து அக்கம்பக்கத்தில் தேடியபோது,

சரிபார்ப்பு பட்டறையில் இருசக்கர வாகனத்திற்கு பூஜை போட்டது போல் இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வாகனத்தை திருடி வந்து சரிபார்த்து கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து அழைத்து வந்து காவலர்களிடம், வாகன உரிமையாளர் பாலு ஒப்படைத்தார். அப்போது, வாகனத்தை தான் திருடவில்லை என அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்