தற்போதைய செய்திகள்

"இதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும்"பைக்கைத் திருடிக் கொண்டு போலீஸுக்கே bye காட்டிய கைதி - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரோடியார்பேட்டைச் சேர்ந்த அப்துல் காதர் என்ற இளைஞர், பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அண்மையில், ரெயின்போ நகரில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற வழக்கில் போலீசார் தேடி வந்த நிலையில், வாகன சோதனையின்போது பெரியகடை காவல் நிலைய போலீசார், அப்துல் காதரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பியோடிய அப்துல் காதரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்