தற்போதைய செய்திகள்

பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் உரிமையாளர்களுக்கு சம்மன் - போலீசார் கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், 5 youtube சேனல்கள் மீது, மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..