தற்போதைய செய்திகள்

"அடுத்த கட்ட டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா" - பிரதமர் நரேந்ரதிர மோடி பேச்சு

தந்தி டிவி
• டெல்லி விஞ்ஞான் பவனில், சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். • இந்த நிகழ்ச்சியில் பாரத் 6 ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6 ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார். • பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நூறு கோடி மொபைல் போன்களுடன் உலகிலேயே நன்கு தொடர்பு வசதி கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். • நாட்டில் ஒவ்வொரு மாதமும் சுமார் 800 கோடிக்கும் அதிகமான யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த பிரதமர், டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு இந்தியா மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளித்து இருப்பதாக தெரிவித்தார். • 5 ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடுத்த ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே 6 ஜி தொழில்நுட்பத்தை பற்றி நாம் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் அடுத்தக் கட்ட டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்